ஷயாம்நீயுஸ்
28.08.2019
விஏஓ பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட தலைவர் சின்னதங்கம், மாவட்ட செயலாளர் சுப்பையா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. அந்த காலிப் பணியிடஙக்ளை ஏற்கனவே மனு செய்துள்ள, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.