ஷ்யாம் நீயூஸ்
05.03.2023
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக தினேஷ் குமார் I A S இன்று பதவி ஏற்றார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய ஆணையராக தினேஷ் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சாரு ஸ்ரீ தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த தினேஷ்குமார் தூத்துக்குடி புதிய ஆணையராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆணையர் தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சியின் 21 வது ஆணையர் ஆவார். மற்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்கள் வாழ்வாதத்திற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதுதான் முதல் பணியாக இருக்கும் என்று தெரிவித்தார்.