75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஷ்யாம் நீயூஸ்
24.02.2023
75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை விழாவை
அதிமுக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தின்படி தூத்துக்குடி டூவீபுரம் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா,பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, பகுதி துணைச்செயலாளர் கணேசன், வட்டச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், நவ்ஷாத், அருண் ஜெயகுமார், சொக்கலிங்கம், மனுவேல் ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, வக்கீல் சரவணபெருமாள், ஜோதிடர் ரமேஸ் கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.