ஷ்யாம் நீயூஸ்
02.02.2023
அதானி குழும மோசடி விவாதம் கோரிய கனிமொழி எம்.பி யின் கோரிக்கை நிராகரிப்பு.
இன்று (02/02/2023) டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்தோம்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.இது சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார் என கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார்.