ஷ்யாம் நீயூஸ்
25.02.2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தூத்துக்குடி அதிமுகவினர் தீவிர ஓட்டு வேட்டை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேற்று நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மந்திர மூர்த்தி, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், 39 வட்ட கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம்,மேற்கு பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வட்டக்கழக செயலாளருமான மணிகண்டண் மற்றும் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா,ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.