ஷ்யாம் நீயூஸ்
14.02.2023
நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் தூத்துக்குடி தாசில்தார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் ஞானராஜ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிரேசி விஜயா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிரேசி விஜயா கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தனது 2 குழந்தைகளையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கணவர் ஞானராஜ் தன்னுடன் அழைத்து விட்டதாகவும், குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் அவர் தனது உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனவே குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-3ல் கிரேசி விஜயா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் சேரலாதன் வழங்கிய தீர்ப்பில். குழந்தைகள் தந்தையின் பராமரிப்பில் இருப்பதை விட தாயின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பதே இயற்கை நீதி எனவே இரண்டு குழந்தைகளிலும் தாயான கிரேசி விஜயாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் கிரேசி விஜயாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் அதிசயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வந்த பின்னர் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி சென்று குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு தனது கணவர் ஞானராஜ் இரண்டு குழந்தைகளை காரில் கடத்தி சென்று உள்ளார் உடனடியாக குழந்தைகளை மீட்டு தரக்கோரி தாசில்தார் ஜான்ராஜ் வீட்டு முன்பு கிரேசி விஜயா கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றம் இரு குழந்தைகளையும் தற்காலிகமாக தாயிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கிய பின்னரும் தாசில்தார் ஞானராஜ் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்து வருவதாக தெரிகிறது.
அரசு உயர் அதிகாரிகளான தாசில்தாரே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்து வருவது தூத்துக்குடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவால் வருவாய்த்துறை அதிகாரி விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.