தூத்துக்குடி அருகே ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஷ்யாம் நீயூஸ்
04.03.2023
தூத்துக்குடி அருகே ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தூத்துக்குடி அருகே உள்ள துப்பாஸ்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெள்ளைச்சாமி இவர் ஆடு வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் புதியம்புத்தூர் ஆட்டுச் சந்தையில் வாங்கி வந்த ஐந்து ஆடுகளை தூத்துக்குடி துப்பாஸ்பட்டி எதிரே உள்ள பச்சை மாடன் கோவில் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் வாயில் முறை தள்ளி உயிரிழப்பதை கண்ட அவர் அருகில் சென்று பார்த்தபோது அரிசியுடன் விஷம் கலந்து ஆடுகள் தின்பதற்காகவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகள் எதனால் இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர். ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆடு வளர்க்கும் வெள்ளைச்சாமி செய்தியாளரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் கருவாடு காயப்போடும் இடத்தின் அருகில் உள்ள தனராஜ் என்பவர் தொடர்ந்து தன்னிடம் ஆடுகளை இப்பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் இவர் தான் ஆடுகளை விஷம் வைத்து அவர்தான் கொலை செய்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர் இதே போல நேற்று தனது சகோதரரின் மாடு ஒன்றும் இறந்து போனது எனக் குறிப்பிட்டார். இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆடுகளை விஷம் வைத்து கொன்றவரிடம் இருந்து தனக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய் பெற்று தர வேண்டும் என கோரிக்கையை விடுத்த அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.