தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்.
ஷ்யாம் நீயூஸ்
15.02.2023
தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்!
தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர்,மற்றும் எழுத்தாளர் காந்திமதி நாதன் .இவர் நலிந்த மக்களுக்காகவும் சமூக அநீதி நடைபெறும் செயல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் இவருக்கு சமூகத்தில் நல்ல நற்பெயர் இருந்து வருகிறது. இவர் பொது மக்களுக்கு செய்யும் நல்ல செயல்கள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் வரும் வருமானத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக தெரிகிறது. இவரின் நற்பெயரை கெடுக்கும் நோக்கோடு தூத்துக்குடி மாவட்ட வட்டாட்சியர்கள் தங்களுக்குள் உள்ள whatsapp குரூப்பில் அவரை பற்றி தவறாக தகவல்களை பரப்பி வந்துள்ளதாக தகவல் தெரிகின்றன
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் வாட்சப் குரூப்பில் அவதூறு பரப்பிய ஆறு வட்டாட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார் அந்த அந்த புகாரில் தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் வட்டாட்சியர்கள் whatsapp வழியாக தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி எனது பெயருக்கும் மாண்பிற்கும் களங்கம் விளைவிக்க முயன்றதாகவும் களங்கம் விளைவிக்க முயன்ற ஆறு வட்டாட்சியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தூத்துக்குடி வட்டாட்சியர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் ஆறு வட்டாட்சியர்கள் சமூக ஆர்வலரைப் பற்றி தவறான தகவலை பரப்பி வந்ததாக குற்றவியல் புகார் கொடுத்திருப்பது தூத்துக்குடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்ற அவமதிப்பு செய்த வட்டாட்சியர்தான் அவதூறு பரப்பிய வாட்ஸ் அப் குரூப்பின அட்மின் என்றும் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுக்கும் போது சமூக ஆர்வலர் சுப மாடசாமி, வழக்கறிஞர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்