தூத்துக்குடியில் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டார்.
ஷ்யாம் நீயூஸ்
25.02.2023
தூத்துக்குடியில் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டார்.
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறயுடன் இணைந்து விடுதி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சார் ஆட்சியர் கெளரவ் குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றினார் மாணவர்கள் உயர்கல்வி படிப்பினை தான் விரும்பிய கல்வியை பயில வேண்டும் மற்றும் அதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.மற்றும் விடுதி மாணவ மாணவிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அ.ஸ்வர்ணலதா, உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ம.பேச்சியம்மாள் மற்றும் பிற்படுத்தப்பட்ட ,சிறுபான்மை நல அலுவலர்கள் மற்றும் விடுதி வார்டன்கள் பலர் கலந்துகொண்டார்.