ஷ்யாம் நீயூஸ்
02.02.2023
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தூத்துக்குடியில் தொடங்கியது!
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் இன்று 2.2.23 துவக்கி வைத்தார். தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரபு மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.அன்டோனி அதிஷ்டராஜ் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
.