அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை தூத்துக்குடியில் ஜி கே வாசன் பேட்டி!
ஷ்யாம் நீயூஸ்
09.02.2023
அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை .தூத்துக்குடியில் ஜி கே வாசன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்ட த மா க மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர் விஜயசீலன் 50வது பிறந்தநாள் விழா கோரம்பள்ளம் காலான்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தாமக மாநில தலைவர் ஜீ கே வாசன் கலந்து கொண்டு விஜயசீலன் தந்தையின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மராயாதை செய்தார் பின்னர் விஜயசீலனை கட்டி அனைத்து வாழ்த்தினர்.50வது பிறந்த நாள் வாழாவில் 50அடி நீளம் உள்ள கேக்கை வெட்டி கொண்டாடப்பட்டது.விழாவில் தூத்துக்குடி தொழிலதிபர்கள் ,விஜயசீலன் சகோதரர் பொன்சீலன் குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். பின்னர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும் திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் தெரிவித்தார் அதானி குழும விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்று விட்டார் என்ற கேள்விக்கு அதானி குழுமம் ஒரு தனிநபர் விவகாரம் என்பதால் பிரதமர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதித்துறை இணைச் செயலர் தெரிவித்திருக்கிறார் என்றும் இதனால் நாட்டிற்கு எந்த இதமான பொருளாதார இழப்பும் ஏற்படவில்லை என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.