ஷ்யாம் நீயூஸ்
16.02.2023
தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி உடன்குடியில் நடைபெற இருக்கிறது
மத்திய அரசின் நிறுவனமான மத்திய பனவெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் நிறுவனம் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் விக்டரி தொழில் முனைவோர் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது இந்த பயிற்சி இந்த மாதம் 27 2.2023 முதல் 03.032023 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் பவித்ரா ரெடிமேட் கார்மெண்ட்ஸ் சென்டரில் வைத்து நடைபெற இருக்கிறது இதில் 20 வகையான உணவு பதப்படுத்துதல் பயிற்சி நேரடியாக செய்து காட்டப்படும் இந்த பயிற்சியில் சாம்பார் பொடி ரசப்பொடி குழம்பு மிளகாய் பொடி மட்டன் பொடி, சிக்கன் பொடி பிரியாணி பொடி, வத்தல் குழம்பு மீன் மசாலா கரம் மசாலா செம்பருத்தி ஜூஸ் பூண்டு ஊறுகாய் உடன்குடி ரோஸ் மில்க் ,உடனடி சாக்லேட் மில்க், க்ரேப் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ரோஸ்மில்க் சிரப், சாக்லேட் மில்க் சிரப், நன்னாரி சர்பத் ,கிரேப் குவாஸ் பாதாம் மில்க், போன்றவைகள் சொல்லித் தர சொல்லித்தரப்பட இருக்கிறது இதில் தொழில் முனைவோர்களும் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இல்லத்தரசிகளும் இதில் கலந்து கொள்ளலாம் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த பயிற்சிகள் கலந்து கொண்டு சொந்தமாக தொழிலை ஆரம்பித்து மாதம் 50 ஆயிரம் வரை வருமானம் பெற்று பயன்பெற இந்த பயிற்சி உதவியாக இருக்கும் என்று விக்டரி தொழில் முனைவோர் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கல்வித் தகுதி 5 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை வயது 18 முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம் மேலும் பயிற்சிக்கு பின் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய 25% மற்றும் 35% வங்கி கடன் உதவி பெற்று தொழில் துவங்க வழிகாட்டப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விக்டரி தொழில் முனைவோர் பயிற்சி மையம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .பயிற்சி கட்டணம் 2000 செலுத்தி பயிற்சி கலந்து கொள்ள வேண்டும் பயிற்சி நடைபெறும் இடம் பவித்ரா ரெடிமேட் கார்மெண்ட்ஸ் சென்டர் நடுக்கடை மீன் கடை ரோடு ,உடன்குடி தூத்துக்குடி மாவட்டம்.