தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ்
03.02.2023
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாமை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி காலாங்கரை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் மற்றும் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புச் சட்டம் கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த முகாமை தூத்துக்குடி கலெக்டர் மருத்துவர் செந்தில்ராஜ் தொடங்கிவைத்தார்.40ஆயிரத்திற்ககும் அதிகமான டோஸ்கள் இருக்கின்றன.தேவைபட்டால் அதிகமான டோஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாட்டு கன்று மற்றும் கோழிகளுக்கான தடுப்பூசி செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் மண்டல இணை இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குநர் டாக்டர் சங்கர நாராயணன், உதவி இயக்குநர் டாக்டர் ஜோசப்ராஜ், புதுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ஆனந்த ராஜ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பெரியசாமி, கால்நடை ஆய்வாளர்கள் நாகூர் மிரான், செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சரஸ்வதி, ஆய்வக உதவியாளர்கள் லீலா ரோஸ், ஜெனிபா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.