ஷ்யாம் நீயூஸ்
17.02.2023
விபத்தில் சிக்கியவர்களை தன் காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார் அமைச்சர் மா.சு
விபத்தில் சிக்கியவர்களை தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் .
சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விகடன் விருது நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் விபத்துக்குள்ளாகி உதவிக்கு காத்திருந்த இருவரை அந்த வழிக வந்த அமைச்சர் மா.சு தன் காரில் அழைத்து சென்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தார். விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றினர் . சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.