தூத்துக்குடி எஸ் டி ஆர் விஜய்சீலன் பிறந்தநாள் விழா தாமாக மாநில தலைவர் ஜி கே வாசன் நேரில் வாழ்த்து!
தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் 50ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா பொன் விழாவாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் காலாங்கரை சாலையில் உள்ள எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டு எஸ் டி ஆர் விஜய்சீலனுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முன்னதாக பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எஸ் டி ஆர் விஜய் சீலன் எஸ்டிஆர் பொன்சீலன் ஆகியவரின் தந்தையின் திருவுருவச் சிலைக்குக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 50 அடி நீளம் உள்ள கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணா திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. 19 மாதங்கள் ஆட்சியில் இருக்கும் திமுக அரசின் மீது மக்களின் எண்ணம் எதிர்மறையாக உள்ளது அதுவே அதிமுக கூட்டணி வெற்றி பெற பெரும் உதவியாக இருக்கும். டெல்டா பகுதியில் விவசாயிகள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யாமல் இந்த அரசு உள்ளது. டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் அதானி குழுமம் பற்றி விவாதிக்க முன்வரவில்லை பிரதமர் மோடி என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் கூறுகையில் அதானி குழுமம் ஒரு குடும்பப் பிரச்சனை என்றும் இது பற்றி நிதித்துறை இணைச் செயலர் பதிலளித்துவிட்டார் இதனால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.