தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் தூத்துக்குடி 29.செப்.2018 மண் சரிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் சுப்பரமணியன் விட்டில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து. மதி, சோனாலம், சுடலை, ஆகிய முவரும் பலியாகினர்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . பாதுகாப்பு அல்லாத கிணறை சுத்தம் செய்ய சொன்ன விட்டின் உரிமையாளர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கிட வேண்டும் மெனவும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. பலியான / மதி, சோனாலம், சுடலை, ஆகியோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .