சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார்
ஷ்யாம் நீயூஸ் 27.02.2023 சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்.இ.ஆ.ப., வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.02.2023) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புனார்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு...