முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் ராஜ்யசபா எம்பி குற்றஞ்சாட்டு

 ஷ்யாம்  நீயூஸ்  23.12.21 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் ராஜ்யசபா எம்பி குற்றஞ்சாட்டு! உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் இருப்பதாக ராஜ்யசபாவில் கேரளாவை சேர்ந்த புதுமுக எம்.பியான ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார். கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புதுமுக எம்.பி.யுமான ஜான் பிரிட்டாஸ்  ராஜ்யசபாவில் பேசியதாவது: இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள். பிராமணர் ஆதிக்கம் 1950-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 14 பேரில் 11 பேர் பிராமணர்கள். 1980-ம் ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாமல் போனது ஏன்? உலகத்திலேயே நீதிபதிகள் நியமனம் இந்த அளவு ரகசியமானதாக எங்கேனும் இருக்கிறதா? நீதித்துறையின் சுதந்திரத்தை தற்போதைய நீதிபதிகள் நியமன முறை (கொலீஜியம், கொலிஜியம்) கேள்விக்குள்ளாக்குகிறது. தகுதியான நீதிபதிகளை கண்டறிந்து நியமிக்க நீதித்துறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீதிபதி ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம்

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2021 தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம்.  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம் மிதந்தது .முத்துக்குமார் வயது 24 தந்தை பெயர் ஏக மூர்த்தி முனிசாமி நகர் தூத்துக்குடியை சேர்ந்தவர் இவர் இன்று காலை  பேன்ட் சட்டையுடன் குளத்தில்  இறந்து கிடந்தார் தகவலறிந்த கோரம்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி புதுக்கோட்டை காவல் துறை மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் இதனடிப்படையில உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல்துறையினர் வாலிபரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் இருசக்கர வாகனம் காலாங்கரை பெரியநாயகிபுரம் சந்திக்கும் இடத்தில் அருகில் நடுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது .தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தில் மரணங்கள் ஏற்பட்டு வருவது சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்

 ஷ்யாம் நீயூஸ்  10.12.2021 2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார். 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு 07.12.2021அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  தலைமையில் தனிவிரல் ரேகை பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 85 பெண்கள், 225 ஆண்கள் என மொத்தம் 310 பேருக்கு  (07.12.2021) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆறுமுகநாடார் ராஜம்மாள் திருமண மஹாலில் தனிவிரல் ரேகை பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில் காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற நீங்கள் தேர்வாகியுள்ளீர்கள். ...

தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ்  02.12.2021 தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு! தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை பாதித்த இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழை பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நண்பகல் 1.40 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தடைந்தார். தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட  மழை பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டார். தேங்கிய தண்ணீரில் நீண்ட  தொலைவு நடந்து சென்று பார்வையிட்ட அவர் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். ஆய்வின்போது, தூத்துக்குடி மக்களவை...

சமூக நீதியா! ஜாதி நீதியா அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்து தலைவி மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர்!

                           ஷ்யாம் நீயூஸ்  30.11.2021 சமூக நீதியா ! ஜாதி நீதியா ! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி ! மற்றும் பஞ்சாயத்து துணை தலைவா்.   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர்   இவர் 01 .06.1996 முதல்   அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967 ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று பணி செய்து வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்...

சமூக நீதியா ஜாதி நீதியா தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி!

 ஷ்யாம் நீயூஸ்  30.11.2021 சமூக நீதியா! ஜாதி நீதியா! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி!  தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம்  ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர் இவர் 01 .06.1996 முதல்  அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் தணிக்கை அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் அப்போதைய தலைவர் தெய்வநாயகம் மற்றும் உபதலைவர் அதிசயராஜ் இருவர் மீதும் நிதி கையாடல் செய்ததற்காக நடவடிக்கை எடுத்தார் அப்போது தவறுகளை மறைப்பதற்கு பஞ்சாயத்து செயலராக இருந்த பரமசிவனிடம் சில கோப்புகளை அழிக்க கேட்டுக்...

தூத்துக்குடி ரஹ்தூத்துக்குடிமத் நகர் மக்களுக்கு உதவும் வகையில் படகு சவாரி ஆட்சியர் ஏற்பாடு

 ஷ்யாம் நீயூஸ்  27.11.2021 தூத்துக்குடி ரஹ்மத் நகர் மக்களுக்கு உதவும் வகையில் படகு சவாரி ஆட்சியர் ஏற்பாடு! தூத்துக்குடி ரஹ்மத் நகரில் படகு சவாரி  கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அருகிலுள்ள ரஹ்மத் நகரில் தெருக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்படி வயதானவர்கள் நோயின் பிடியில் உள்ளவர்கள் மற்றும்  பெரியவர்களுக்கு உதவும் வகையில் தீயணைப்பு துறை மீன்வளத்துறை மூலம் பொதுமக்களை வெளியில் கொண்டு வருவதற்கு படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தண்ணீர் குறைந்து ரோடு மட்டும் தெரியும் வரை இப்பணி தொடரும் என தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் தெரிவித்தார்

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!

 ஷ்யாம் நீயூஸ்  25.11.2021 தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்! இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 .10 .21 முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத...

தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!

  தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!   இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 10 இருபத்தி ஒன்று முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து...

68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.

 ஷ்யாம் நீயூஸ்  19.11.2021 68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.  68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி ஏ வி எம் கமலவேல் மஹாலில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு நலதிட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அனைத்து இந்திய அளவில் ஆண்டுதோறும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் திங்கள் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது இவ்வாண்டு 60வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முதன்மை கருப்பொருள் கூட்டுறவால் வளம் பெறுவோம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் அறுபத்தி 68 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஆறாவது நாளான இன்று (19 .11 .2021) இளைஞர் மகளிர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் (இ. ஆ. ப) தலைமை வகித்தார் ஒரு பகுதியாக கூட்டுற...

சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய ஓடையில் ஓட்டை!

சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய ஓடையில் ஓட்டை!  தூத்துக்குடியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய ஓடைகள்  ஓட்டைகளாக கணப்படுகிறது.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிட்டில்  கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்க்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டிய அதிமுக முக்கிய புள்ளிகளால் டூபிளிகட் கான்கள் டூப்ளிகட் ஓடை கரைகளை  அவசர அவசரமாக கட்டினர். இதை கண்காணிக்க வேண்டிய தூத்துக்குடி  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அந்த துறை சார்ந்த எஞ்சினியர்கள் ஒப்பந்ததார் கவனிப்பில் சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர். ஆட்சிதலைவர் அலுவலகம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைகள்  எஞ்சினியர்கள் சரியான கவனிப்பு இல்லாததால் இரண்டு நாள் பெய்த மழையில் உடைந்து ஓட்டைகளாக காணப்படுகிறது. ஓய்யாரமாம் கொண்டைகாரி உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்  என்ற பலமொழிக்கு ஏற்ப திறமையான எஞ்சினியர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தூத்துக்குடி மாநகராட்சி  எஞ்சினியர்களால் கண்காணிக்கப்பட்ட  வேலை...

தூத்துக்குடியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு!கனிமொழி எம்.பி தொடங்கிவைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ்  07.11.2021 தூத்துக்குடியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகள்  சீரமைப்பு!கனிமொழி எம்.பி தொடங்கிவைத்தார். தூத்துக்குடியில் பெய்த மழையில் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக கணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 இடங்கள்  கண்டறியப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடும் பணியை தூத்துக்குடி எம் பி கனிமொழி மற்றும் சமுகநலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர் கீதாஜீவன் இருவரும் தொடங்கி வைத்தனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தற்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளம் தெரியாமல்   வரும் பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்பட்டுவிடகூடாது என்பதற்காக இப்பணி தொடங்கி வைக்க பட்டுள்ளது.பின்பு அணைத்து சாலைகளும் முழுமையாக போடப்படும் என தெரிவித்தார்.   இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில் ராஜ்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் உடன் இருந்தனர்....

100 ஆண்டு கால பழமையான ஆலமரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்தது

 ஷ்யாம் நீயூஸ்  03.11.2021 100 ஆண்டு கால பழமையான ஆலமரம் மழையினால்  வேரோடு சாய்ந்து விழுந்தது      தூத்துக்குடி மாவட்டம் காலான்கரை கிராமத்திற்கும் குளையன்கரிசல் கிராமத்திற்கும் இடையில் 24 மதகுகள் கொண்ட அணை ஒன்று  ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வடிவமைத்து கட்டப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது  கோரம்பள்ளம் பகுதியில் உள்ள இந்த அணை தூத்துக்குடி மக்களை வெள்ளத்தில் இருந்து காத்து வருகிறது.           அணையின்  தென்புறம் ஓர் ஆலமரமும், வடபுறம் பல புளிய மரங்களும் உருவாகி தற்போது அவை நிழல் தரும் வகையில் பெரிய மரங்களாக உள்ளன. இந்நிலையில், 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக, தென்புறம் இருந்த ஆலமரம் நேற்று (செவ்வாய்கிழமை) காலை வேருடன் சாய்ந்து விழுந்தது. இந்த ஆலமரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உருவானதாக கூறப்படுகிறது.          அனையை சுற்றி உள்ள காலாங்கரை,அத்திமரபட்டி,குளையன்கரிசல், சிறுப்பாடு கிராம கால்நடை பராமரிப்பு  மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள   விவசாய மக்களுக...

பொதிகை தொலைகாட்சி தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்.

ஷ்யாம் நீயூஸ்  01.11.2021 பொதிகை தொலைகாட்சி தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம். பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைகானலில் இயங்கி வருகின்ற உயர்தர தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் (HPT) சேனல் எண் (7) அலைவரிசை 189.25MHz தூர்தர்ஷன் பொதிகை தரைவழி ஒளிபரப்பு அக்டோபர் 31ம் தேதியோடு நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரசார் பாரதியின் அனைத்து சேனல்களும் DTH சேவைமூலம் கொடைகானல் சுற்றுவட்டார பகுதியில் கிடைக்கும் என பிரசார் பாரதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒன் டைம் செட்டில்மென்ட் க்கு ஆசைபட்ட தூத்துக்குடி பிஷப் விரைவில் டிஸ்மிஸ்?

 ஷ்யாம் நீயூஸ்  24.10.2021 ஒன் டைம் செட்டில்மென்ட்  க்கு ஆசைபட்ட தூத்துக்குடி  பிஷப் விரைவில் டிஸ்மிஸ்? தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் DSF கிப்சன் அணி வெற்றி பெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில்  இருந்த SDKஅணி தோல்வியை தழுவியது. தோல்வியை  ஏற்றுக்கொள்ள முடியாத SDK அணியினர் பேராயர்  SEC தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற DSF அணியினர் தென்னிந்திய திருச்சபை  தலைமையகம்  சினாடிடம் முறையிட்டனர். சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க  பேராயருக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது. மேலும் பேராயரை DSF அணியினர் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் சினாடு அறிக்கையை  மதி...

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் டி.எஸ்.எப். அணியினர் வெற்றி.!

 ஷ்யாம் நீயூஸ்  20.10.2021 தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் டி.எஸ்.எப். அணியினர்  வெற்றி.!                      தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் இன்று  நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் கல்லூரியில்  காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது.           இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் டி.எஸ். எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றனர். நாசரேத் திருமண்டல லே செயலாளராக கிப்சன் மற்றும் அவரது அணியை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், டி.எஸ்.எப் ஆதரவாளர்கள் உற்சாகம் அ...

தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி நலதிட்டம் வழங்பட உள்ளது .

 தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி  நலதிட்டம் வழங்பட உள்ளது . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 50 வது ஆண்டுவிழா கொண்டாடும் வகையில் தெற்கு மாவட்ட  தூத்துக்குடி அதிமுக செயலாளர் சண்முகநாதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் மத்திய வடக்குபகுதி எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் B.திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 39 வது வார்டு பொதுமக்களுக்கு நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. வடக்கு ரத வீதி D.A திருமணமண்டபத்தில் வரும் 26.10.2021 மாலை 6மணியளவில் நடைபெறும் விழாவில் 170 பெண்களுக்கு சேலையும் 50 ஆண்களுக்கு வேஷ்டியும்  20நபர்களுக்கு இஸ்திரி பேட்டி மற்றும் தையல் எந்திரமும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவரும் பொதுமக்களுக்கு அன்னதாம் தானம் வழங்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு !

 ஷ்யாம் நியூஸ்  22.09.2021 மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு ! தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது .அதே நேரத்தில் மழை காலமும் நெருங்கி விட்டது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்படும் வேளைகளில் கழிவு நீர் கால்வாய்கள் வேலை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது .இது  தொடர்ந்தால் மழைக்காலத்தில் தூத்துக்குடி நகரம் ;தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படும் என்றும் தூத்துக்குடி மத்திய மையவாடி பகுதியில் உள்ள குட்டைகளை அகற்றவும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு      காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவ்ராஜ் மோகன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜிடம் மனுகொடுத்தனர் மாநில ஒருங்கிணைப்பாளர்  டி .ஜெயக்கொடி ,அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் முத்துமணி ,ஊடக பிரிவு சுந்தரராராஜ் ,நிர்வாகி ராஜப்பா ஆகியோர் உடன் இருந்தனர் .

ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !

 ஷ்யாம் நியூஸ்  06.09.2021 ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு ! தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளராக ஐயப்பன் பணியாற்றி வருகிறார் .இவர் அரசு மதுபான மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக வைத்துக் கொண்டு மதுபான சில்லறை  விற்பனை கடை ஒன்றுக்கு மதம் பத்தாயிரம் மாமூல் வசூல் செய்வதாக தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி சங்கதினர்   கலெக்டரிடம் மனு அளித்தனர் .மேலும் அந்த மனுவில் மாவட்ட  மேலாளர்  மேலாண்மை இயக்குனர் உத்தரவுகளை மீறி தற்காலிக பணியிடமாற்றம் என்ற ஆணைகளை தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களிடம் விற்பனை  செய்கிறார் .கொரானா காலகட்டத்தில்  மூடப்பட்ட கடையில் மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக முதல் தகவல்  அறிக்கையில் பெயர் இல்லாத கடைப்பணியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களுக்கு (கடை எண் 9970)பணி ஆணை வழங்கியுள்ளார் மற்றும் கடை மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி அணைத்து கடைகளிலும் மாதம்தோறும் சுமார் பத்து ஆயிரம் ரூபாய்க்கு குறையா...

ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கு அன்னதாம்,

 ஷ்யாம் நீயூஸ்  31.08.2021 ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ வின் 38வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்  30.08.2021 அன்று  கொண்டாடினர்.இதனை முன்னிட்டு  தூத்துக்குடி காங்கிரஸ்  தொழிலாளர் தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் தலமையில் தூத்துக்குடியில் உள்ள பிளசிங் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு  மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது   இதில் டி.ஜெயக்கொடி (அமைப்புசாரா தொழிலாளர்)காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ராஜப்பன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். 

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

 தூத்துகுடியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.  டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஓய்வூதிய சட்டபடி ஓய்வூதியம் வழங்கிடவும் இ எஸ் ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும்  தூத்துக்குடியில் மாவட்டத்தில் பணிபரியும் அனைத்து பணியாளர் மற்றும் பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் இயக்கத்தை நடத்தினர். 22.08.2021 முதல் 28.08.2021 வரை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெத்துகளை வரும் .01.09.2021 அன்று அனைத்து மாவட்டத்தில் இருந்தும் தபால் மூலம் முதல்வருக்கு அனுப்பி வைக்கபடும் என்று டாஸ்மாக்  ஏஐடியூசி மாநில துணைதலைவர் நெல்லை நெல்லை நெப்போலியன் தெரிவித்தார். உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏஐடியூசி நிர்வாகிகள் காளிமுத்து, ராஜபாண்டி மற்றும் சகாயம் உடனிருந்தனர். மேலும் நெல்லை நெப்போலியன் கூறுகையில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜப்பான் மீது பல்வேறு புகார்கள் உள்ளன அவர் மீதான புகார்களை விரைவாக விசாரணை செய்திடவேண்டும் என வரும் 6ம் தேதி தூத்துக...

தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு !

  ஷ்யாம் நியூஸ்  12.08.2021 தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு ! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரின் மைய பகுதியில் அமைத்துள்ள  வ உ சிதம்பரனார்  கல்லுரி இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் 68 வது இடத்தை பிடித்துள்ளது .  வ உ சிதம்பரனார்  கல்லுரி 70 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையை செய்துவருகிறது . வ உ சிதம்பரனார்  கல்லுரி கல்வி துறையில்  பல சாதனைகளை செய்து வருகிறது .இந்தியளவிலான  கல்வி தர நிறுவனகளும் மற்றும் தனியார் தர நிறுவனங்களும் வ உ சிதம்பரம் கல்லுரியின் தரத்தை பாராட்டி பல விருதுகளை வருடம்தோறும் வழங்கி வருகின்றன . இந்திய நாட்டின் கல்வி நிறுவங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் NIRF நிறுவனம் (தேசிய தர நிர்ணய கட்டமைப்பு )2020 ஆம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரம் சார்ந்த பணிகளை தர  நிர்ணயம் செய்து இந்திய அளவில் 68 ஆம் இடம் கொடுத்துள்ளது . 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் 1559 கல்லூரிகளை  தர நிர்ணயம் செய்ததில் வ உ சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மிதக்கும் மனித உடல்!

 ஷ்யாம் நீயூஸ்  10.08.2021 தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மிதக்கும் மனித உடல்! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தில் ஒரு மனித உடல் மிதந்த நிலையில் உள்ளன.இதனை அறிந்த கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி  ராஜலட்சுமி காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு  தகவல் தெரிவித்தார்.உடலை மீட்ட சிப்காட்  தீயணைப்புத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை காவல்துறைனிடம் ஒப்படைத்தனர்.உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் எஸ்.ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.இறந்த நபர் பெயர் சுடலைமணி(40) த/பெ முத்துவீரன் இவர் கோரம்பள்ளம் ஸ்ரீனிநகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி !

ஷ்யாம் நியூஸ்  26.07.2021 தூத்துக்குடி  டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  கடை எண் 10138 ல் விற்பனையாளராக உள்ளவர்   பி .நாகராஜன்  மாற்று திறனாளியான  இவர் 05.10.2020  ல் அக்கடைக்கு பணியமர்த்த பட்டுள்ளார் .இந்த நிலையில் கடையின் மேற்பார்வையாளர் சரவணன் இவரது ஊனத்தை ஜாதியையும்  காரணம் காட்டி இழிவாக பேசி பணி  செய்ய விடமால் சுமார் ஒரு வருடமாக தடுத்துள்ளார் .இதுகுறித்து தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பனிடம் மற்றும் உதவி மேலாளர் இருவரிடமும்  பலமுறை புகார் தெவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம் .மற்றும் மதுரை மண்டல மேலாளர்  ஆணை பிறப்பித்தும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஐயப்பன் கடை மாறுதல் அனுமதி கொடுக்காமல் லஞ்சம் வேண்டும் என்பதற்காக மேற்பார்வையாளர் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளாராம்.  இதனால் மனவேதனை அடைந்த நாகராஜன்  நேற்று (26.07.2021) ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் .அப்போது...

புளுக்கள்கூட மிதித்தால் நெளியும் ஊடகம் அதைவிட கேவலமானதா?மூத்த பத்திரிகையாளர் மணி வேதனை!

 ஷ்யாம் நீயூஸ்  18.07.2021 புளுக்கள்கூட மிதித்தால் நெளியும் ஊடகம் அதைவிட கேவலமானதா?மூத்த பத்திரிகையாளர் மணி வேதனை! சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கண்ரோலுக்குள் வந்தும்விடும் என பொது வெளியில் பேசியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக மாநில தலைவர் எல் முருகன்  தோல்வியை தழுவினார் தற்போது எல் முருகனை மத்திய பாஜக அரசு ஊடகங்களை கண்காணிக்க உள்ள துறைக்கு இணை அமைச்சராகப் பதவி கொடுத்து உயர்த்தியுள்ளது.இந்த நிலையில் தமிழக மாநில பாஜக தலைவராக கடந்த தேர்தலில் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.  இந்த நிலையில் அண்ணாமலை சமீபத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும் என பேசியிருந்தார். இவரது பேச்சை எந்த ஊடகங்கள் நிறுவன தலைவர்கள் ஒரு கண்டனம் கூட இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை பிரஸ் கவுன்சிலும் கண்டு கொள்ளவில்லையே என்பது வேதனை அளிக்கிறது. புழுக்கள் கூட மிதித்தால் நெளியும் ஊடகம் சுதந்திரத்தை இவ...