ஷ்யாம் நீயூஸ்
25.11.2021
தூத்துக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார்!
இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக கலைக்குழு மூலம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தா குளத்தில் நடந்த இந்த விழாவில் அவர் கூறுகையில் கற்றல் இழப்பினை சரி செய்வதற்காக நமது மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டுவந்துள்ள திட்டம் மிக சரியான முறையில் வெற்றி அடைய வேண்டும் அந்த வெற்றியை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைப்பயணம் பரிட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 20 .10 .21 முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இச்செயல்பாடு பொதுமக்கள் இடத்திலும் தன்னார்வலர் இடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இதுநாள் வரை தோராயமாக 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்துள்ளனர். நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 2162 குடியிருப்புகளில் 4660 கல்வி தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் மேலும் வருங்கால தலைவர்களை உருவாக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.