ஷ்யாம் நீயூஸ்
19.11.2021
68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.
68வது கூட்டுறவு வார விழா தூத்துக்குடி ஏ வி எம் கமலவேல் மஹாலில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு நலதிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அனைத்து இந்திய அளவில் ஆண்டுதோறும் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் திங்கள் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது இவ்வாண்டு 60வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முதன்மை கருப்பொருள் கூட்டுறவால் வளம் பெறுவோம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் அறுபத்தி 68 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஆறாவது நாளான இன்று (19 .11 .2021) இளைஞர் மகளிர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் (இ. ஆ. ப) தலைமை வகித்தார் ஒரு பகுதியாக கூட்டுறவு கொடியினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஏற்றிவைத்தார் விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தனர் கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் விழாவின்போது 2030 பயனாளிகளுக்கு 13.02 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு 41.37 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டது. கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ் அமிர்தராஜ் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி துணை பதிவாளர் ஜெயசீலன், இரவீந்திரன் பாலகிருஷ்ணன், மாரியப்பன், சந்திரா, சுப்புராஜ், அமுதா கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் சு .கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்