சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய ஓடையில் ஓட்டை!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய ஓடைகள் ஓட்டைகளாக கணப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்க்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டிய அதிமுக முக்கிய புள்ளிகளால் டூபிளிகட் கான்கள் டூப்ளிகட் ஓடை கரைகளை அவசர அவசரமாக கட்டினர். இதை கண்காணிக்க வேண்டிய தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அந்த துறை சார்ந்த எஞ்சினியர்கள் ஒப்பந்ததார் கவனிப்பில் சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர். ஆட்சிதலைவர் அலுவலகம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைகள் எஞ்சினியர்கள் சரியான கவனிப்பு இல்லாததால் இரண்டு நாள் பெய்த மழையில் உடைந்து ஓட்டைகளாக காணப்படுகிறது. ஓய்யாரமாம் கொண்டைகாரி உள்ள இருக்குமாம் ஈரும் பேனும் என்ற பலமொழிக்கு ஏற்ப திறமையான எஞ்சினியர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தூத்துக்குடி மாநகராட்சி எஞ்சினியர்களால் கண்காணிக்கப்பட்ட வேலைகள் ஒன்று கூட உருப்படியாக இல்லை.திட்டம் போட்டு பொதுமக்கள் பணம் வீணாக்கபடுகிறது என பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மற்றும் இவ்வாறு அறைகுறையாக செய்யபடும் வேலைகளை மழை வெள்ளத்தை காரணம் காரணம் காட்டி மாநகராட்சி அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தினார். தற்போது பொறுப்பெற்றுள்ள தி மு க அரசு சீர்மிகு தூத்துக்குடி திட்டத்தில் கட்டிய வேலைகளை மறு ஆய்வு செய்து சரிசெய்யவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.