ஷ்யாம் நீயூஸ்
03.11.2021
100 ஆண்டு கால பழமையான ஆலமரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம்
காலான்கரை கிராமத்திற்கும் குளையன்கரிசல் கிராமத்திற்கும் இடையில் 24 மதகுகள் கொண்ட அணை ஒன்று ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வடிவமைத்து கட்டப்பட்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது கோரம்பள்ளம் பகுதியில் உள்ள இந்த அணை தூத்துக்குடி மக்களை வெள்ளத்தில் இருந்து காத்து வருகிறது.
அணையின் தென்புறம் ஓர் ஆலமரமும், வடபுறம் பல புளிய மரங்களும் உருவாகி தற்போது அவை நிழல் தரும் வகையில் பெரிய மரங்களாக உள்ளன. இந்நிலையில், 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக, தென்புறம் இருந்த ஆலமரம் நேற்று (செவ்வாய்கிழமை) காலை வேருடன் சாய்ந்து விழுந்தது. இந்த ஆலமரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உருவானதாக கூறப்படுகிறது.
அனையை சுற்றி உள்ள காலாங்கரை,அத்திமரபட்டி,குளையன்கரிசல், சிறுப்பாடு கிராம கால்நடை பராமரிப்பு மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய மக்களுக்கும் நிழல் தந்து களைப்பை போக்கிய ஆல மரம் வேரோடு சாய்ந்து வெறிச்சோடி கிடைக்கிறது.