ஷ்யாம் நீயூஸ்
07.11.2021
தூத்துக்குடியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு!கனிமொழி எம்.பி தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடியில் பெய்த மழையில் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக கணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 இடங்கள் கண்டறியப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடும் பணியை தூத்துக்குடி எம் பி கனிமொழி மற்றும் சமுகநலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர் கீதாஜீவன் இருவரும் தொடங்கி வைத்தனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தற்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி மேடு பள்ளம் தெரியாமல் வரும் பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்பட்டுவிடகூடாது என்பதற்காக இப்பணி தொடங்கி வைக்க பட்டுள்ளது.பின்பு அணைத்து சாலைகளும் முழுமையாக போடப்படும் என தெரிவித்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில் ராஜ்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.