ஷ்யாம் நீயூஸ்
27.11.2021
தூத்துக்குடி ரஹ்மத் நகர் மக்களுக்கு உதவும் வகையில் படகு சவாரி ஆட்சியர் ஏற்பாடு!
தூத்துக்குடி ரஹ்மத் நகரில் படகு சவாரி
கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அருகிலுள்ள ரஹ்மத் நகரில் தெருக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்படி வயதானவர்கள் நோயின் பிடியில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உதவும் வகையில் தீயணைப்பு துறை மீன்வளத்துறை மூலம் பொதுமக்களை வெளியில் கொண்டு வருவதற்கு படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தண்ணீர் குறைந்து ரோடு மட்டும் தெரியும் வரை இப்பணி தொடரும் என தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் தெரிவித்தார்