தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு !
ஷ்யாம் நியூஸ்
12.08.2021
தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு !
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரின் மைய பகுதியில் அமைத்துள்ள வ உ சிதம்பரனார் கல்லுரி இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் 68 வது இடத்தை பிடித்துள்ளது .
வ உ சிதம்பரனார் கல்லுரி 70 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையை செய்துவருகிறது . வ உ சிதம்பரனார் கல்லுரி கல்வி துறையில் பல சாதனைகளை செய்து வருகிறது .இந்தியளவிலான கல்வி தர நிறுவனகளும் மற்றும் தனியார் தர நிறுவனங்களும் வ உ சிதம்பரம் கல்லுரியின் தரத்தை பாராட்டி பல விருதுகளை வருடம்தோறும் வழங்கி வருகின்றன .
இந்திய நாட்டின் கல்வி நிறுவங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் NIRF நிறுவனம் (தேசிய தர நிர்ணய கட்டமைப்பு )2020 ஆம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரம் சார்ந்த பணிகளை தர நிர்ணயம் செய்து இந்திய அளவில் 68 ஆம் இடம் கொடுத்துள்ளது .
2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் 1559 கல்லூரிகளை தர நிர்ணயம் செய்ததில் வ உ சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இடைகளில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது .குறைந்த கல்வி கட்டணம் என்ற அடிப்படையில் வணிக நிர்வாகவியல் படப்பிரிவுக்கு 4 ஆம் இடமும் கலை படங்களுக்கு 5 ஆம் இடமும் அறிவியல் படங்களுக்கு 6 ஆம் இடமும் கிடைத்துள்ளது .கல்வி கட்டண தொகைக்கு கிடைக்கும் சிறப்பான கல்வி என்ற அடிப்படையில் வணிகவியல் பாடப்பிரிவிக்கு 6 ஆம் இடமும் கிடைத்துள்ளது .தி வீக் நாளிதழ் வ உ சிதம்பரம் கல்லூரியை தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய தென் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது .மேலும் கல்லூரி முதல்வர் சி, வீரபாகு கூறுகையில் கல்வி ஒரு பொழுதும் வணிகமயமாக்கப்பட கூடாது என்ற கொள்கையை இக் கல்லூரி கடைபிடித்து வருகிறது .வெளிநாட்டு மாணவர்களும் உயர் கல்வி பயில வ உ சிதம்பரம் கல்லூரியை தேர்வு செய்துகொள்ளலாம் என்று இந்திய தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார் .