தூத்துகுடியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஓய்வூதிய சட்டபடி ஓய்வூதியம் வழங்கிடவும் இ எஸ் ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் தூத்துக்குடியில் மாவட்டத்தில் பணிபரியும் அனைத்து பணியாளர் மற்றும் பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் இயக்கத்தை நடத்தினர். 22.08.2021 முதல் 28.08.2021 வரை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெத்துகளை வரும் .01.09.2021 அன்று அனைத்து மாவட்டத்தில் இருந்தும் தபால் மூலம் முதல்வருக்கு அனுப்பி வைக்கபடும் என்று டாஸ்மாக் ஏஐடியூசி மாநில துணைதலைவர் நெல்லை நெல்லை நெப்போலியன் தெரிவித்தார். உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏஐடியூசி நிர்வாகிகள் காளிமுத்து, ராஜபாண்டி மற்றும் சகாயம் உடனிருந்தனர். மேலும் நெல்லை நெப்போலியன் கூறுகையில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜப்பான் மீது பல்வேறு புகார்கள் உள்ளன அவர் மீதான புகார்களை விரைவாக விசாரணை செய்திடவேண்டும் என வரும் 6ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தூத்துக்குடி டாஸ்மாக் ஏஐடியூசி சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடபடுள்ளதாகவும் தெரிவித்தார்.