ஷ்யாம் நீயூஸ்
10.08.2021
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மிதக்கும் மனித உடல்!
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தில் ஒரு மனித உடல் மிதந்த நிலையில் உள்ளன.இதனை அறிந்த கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தார்.உடலை மீட்ட சிப்காட் தீயணைப்புத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை காவல்துறைனிடம் ஒப்படைத்தனர்.உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் எஸ்.ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.இறந்த நபர் பெயர் சுடலைமணி(40) த/பெ முத்துவீரன் இவர் கோரம்பள்ளம் ஸ்ரீனிநகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.