ஷ்யாம் நீயூஸ்
24.10.2021
ஒன் டைம் செட்டில்மென்ட் க்கு ஆசைபட்ட தூத்துக்குடி பிஷப் விரைவில் டிஸ்மிஸ்?
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் DSF கிப்சன் அணி வெற்றி பெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில் இருந்த SDKஅணி தோல்வியை தழுவியது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத SDK அணியினர் பேராயர் SEC தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற DSF அணியினர் தென்னிந்திய திருச்சபை தலைமையகம் சினாடிடம் முறையிட்டனர். சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க பேராயருக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது. மேலும் பேராயரை DSF அணியினர் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் சினாடு அறிக்கையை மதிக்காமல் பேராயர் தேவசகாயம் நேற்று இரவு திருமண்டல தேர்தலில் தேல்வியுற்ற முன்னாள் லே செயலாளர் SDK ராஜனின் வெள்ளரிக்காய் ஏற்றுமதி நிறுவனத்தில் வைத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் வரும் நவம்பர் 1ம் தேதி திருமண்டல தேர்தல் நடைபெறும் என்று சினாடு அறிக்கைக்கு எதிராக அறிவித்தார். இதுகுறித்து திருசபை நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது SDK ராஜன் அணியினர் தேவசகாயத்திற்கு ஒன் டைம் செட்டில்மென்ட் அதாவது அவரது ஓய்வுக்கு பின் கிடைக்கும் பணத்தை மொத்தமாக தருவதாக பேசியதை நம்பி சினாடுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார். சினாடுக்கு எதிராக செயல்படும் பிஷப்புக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என தெரிந்தே தேவசகாயம் செயல்பட்டுள்ளார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல் பேராயர் J.A.D ஜெபசந்திரனும் சினாடை பகைத்ததால் தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்காமல் பாதியில் நடையை கட்டினார். அதே போன்று இரண்டாவது பேராயரான S.E.C தேவசகாயமும் சினாடுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
புதிய பேராயர் வரும் வரை மாடரேட்டர் கமிசரி அமைத்து வழக்கமான பணிகளை செயல்படுத்தபடும் என தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.