ஷ்யாம் நீயூஸ்
20.10.2021
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் டி.எஸ்.எப். அணியினர் வெற்றி.!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் கல்லூரியில் காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் டி.எஸ். எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நாசரேத் திருமண்டல லே செயலாளராக கிப்சன் மற்றும் அவரது அணியை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், டி.எஸ்.எப் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.