மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு !
ஷ்யாம் நியூஸ்
22.09.2021
மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு !
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது .அதே நேரத்தில் மழை காலமும் நெருங்கி விட்டது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்படும் வேளைகளில் கழிவு நீர் கால்வாய்கள் வேலை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது .இது தொடர்ந்தால் மழைக்காலத்தில் தூத்துக்குடி நகரம் ;தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படும் என்றும் தூத்துக்குடி மத்திய மையவாடி பகுதியில் உள்ள குட்டைகளை அகற்றவும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவ்ராஜ் மோகன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜிடம் மனுகொடுத்தனர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி .ஜெயக்கொடி ,அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் முத்துமணி ,ஊடக பிரிவு சுந்தரராராஜ் ,நிர்வாகி ராஜப்பா ஆகியோர் உடன் இருந்தனர் .