ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !
ஷ்யாம் நியூஸ்
06.09.2021
ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !
தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளராக ஐயப்பன் பணியாற்றி வருகிறார் .இவர் அரசு மதுபான மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக வைத்துக் கொண்டு மதுபான சில்லறை விற்பனை கடை ஒன்றுக்கு மதம் பத்தாயிரம் மாமூல் வசூல் செய்வதாக தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி சங்கதினர் கலெக்டரிடம் மனு அளித்தனர் .மேலும் அந்த மனுவில் மாவட்ட மேலாளர் மேலாண்மை இயக்குனர் உத்தரவுகளை மீறி தற்காலிக பணியிடமாற்றம் என்ற ஆணைகளை தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களிடம் விற்பனை செய்கிறார் .கொரானா காலகட்டத்தில் மூடப்பட்ட கடையில் மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாத கடைப்பணியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களுக்கு (கடை எண் 9970)பணி ஆணை வழங்கியுள்ளார் மற்றும் கடை மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி அணைத்து கடைகளிலும் மாதம்தோறும் சுமார் பத்து ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் மாமூல் வேட்டை வசூல் செய்து வருகிறார் மேல் அதிகாரிகளின் ஆணையை மதிக்காமல் மேற்பார்வைளர்களை தூண்டிவிட்டுபணியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததின் மூலம் சிவஞானபுரம் கடையில் பணியற்றிய நாகராஜ் என்கின்ற ஊழியர் 23.07.2021 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதை செய்திதாள்களில் வந்ததை எண்ணி ஏ ஐ டீ யூ சி சங்கமும் தொழிலார்களும் மனஉளைச்சலில் உள்ளனர் .இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை செய்து வரும் மாவட்ட மேலாளர் ஐயப்பன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது .டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தலமையில் ஆர்ப்பாட்டம் செய்து கலெக்டரிடம் மனு அளித்தனர் .மாவட்ட ஏ ஐ டீ யூ சி செயலாளர் இ.கிருஷ்ணராஜ் ,மாவட்ட ஏ ஐ டீ யூ தலைவர் பாலசிங்கம் ,சிரைவேல் ,மதுராகோட்ஸ் கிருஷ்ணமூர்த்தி ,வங்கி ஊழியர் சங்கம் சேது ,கட்டுமான பணியாளர் சங்கம் சுப்ரமணியன் ,மற்றும் ஏ ஐ டீ யூ சி டாஸ்மாக் நிர்வாகிகள் ,காளிமுத்து ,ராஜபாண்டி ,சகாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .