2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்
ஷ்யாம் நீயூஸ்
10.12.2021
2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்.
2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு 07.12.2021அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தனிவிரல் ரேகை பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 85 பெண்கள், 225 ஆண்கள் என மொத்தம் 310 பேருக்கு (07.12.2021) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆறுமுகநாடார் ராஜம்மாள் திருமண மஹாலில் தனிவிரல் ரேகை பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற நீங்கள் தேர்வாகியுள்ளீர்கள். இதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்யகூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் தேர்வு எழுதுவதற்கு வழங்கிய சான்றிதழ் அனைத்தும் சரிபார்க்கபடும், மேலும் உங்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உங்கள் மீது குற்ற வழக்குகள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகு நீங்கள் காவல்துறைக்கு பணியாற்ற தகுதி பெறுவீர்கள். மேலும் வருங்காலங்களில் காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்றுமாறு அறிவுரைகள் வழங்கி அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அலுவலர் சுப்பையா, கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார், உதவியாளர் ஆறுமுகம், செந்தில் விநாயக பெருமாள் உட்பட அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் தனிவிரல் ரேகை பதிவு கூட உதவி ஆய்வாளர்கள் முருகேஸ்வரி, வைஜெயந்தி மாலா, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயலட்சுமி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.