ஷ்யாம் நீயூஸ்
23.12.2021
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் சடலம் மிதந்தது .முத்துக்குமார் வயது 24 தந்தை பெயர் ஏக மூர்த்தி முனிசாமி நகர் தூத்துக்குடியை சேர்ந்தவர் இவர் இன்று காலை பேன்ட் சட்டையுடன் குளத்தில் இறந்து கிடந்தார் தகவலறிந்த கோரம்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி புதுக்கோட்டை காவல் துறை மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் இதனடிப்படையில உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல்துறையினர் வாலிபரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் இருசக்கர வாகனம் காலாங்கரை பெரியநாயகிபுரம் சந்திக்கும் இடத்தில் அருகில் நடுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது .தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தில் மரணங்கள் ஏற்பட்டு வருவது சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .