ஷ்யாம் நீயூஸ்
18.07.2021
புளுக்கள்கூட மிதித்தால் நெளியும் ஊடகம் அதைவிட கேவலமானதா?மூத்த பத்திரிகையாளர் மணி வேதனை!
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கண்ரோலுக்குள் வந்தும்விடும் என பொது வெளியில் பேசியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக மாநில தலைவர் எல் முருகன் தோல்வியை தழுவினார் தற்போது எல் முருகனை மத்திய பாஜக அரசு ஊடகங்களை கண்காணிக்க உள்ள துறைக்கு இணை அமைச்சராகப் பதவி கொடுத்து உயர்த்தியுள்ளது.இந்த நிலையில் தமிழக மாநில பாஜக தலைவராக கடந்த தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை சமீபத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும் என பேசியிருந்தார். இவரது பேச்சை எந்த ஊடகங்கள் நிறுவன தலைவர்கள் ஒரு கண்டனம் கூட இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை பிரஸ் கவுன்சிலும் கண்டு கொள்ளவில்லையே என்பது வேதனை அளிக்கிறது. புழுக்கள் கூட மிதித்தால் நெளியும் ஊடகம் சுதந்திரத்தை இவ்வளவு கேவலமாக பேசியபின்பும் எதிர்வினையாற்றாமல் இருப்பது அவமானமான செயல்.எல். முருகன் குறிப்பிட்ட துறைக்கு இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு அண்ணாமலை பேசியதை சாதாரணமாக எடுத்து கொள்ளமுடியாது.வட இந்திய மீடியாக்களை தன் கைக்குள் வைத்திருப்பதை போன்று தமிழக மீடியா ஊடகங்களை மனதில் வைத்து பேசியிருக்கிறார்.இது வன்மையாக கண்டிக்கதக்கது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தன் மன வேதனையை தெரியபடுத்தியுள்ளார்.