ஷ்யாம் நீயூஸ்
13.07.2021
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல். லே செயலாளர் பதவிக்கு டி எஸ் எப் கிப்சன் போட்டி!
தூத்துக்குடியில் நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.இந்த நிலையில் தற்போதய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய பிரமுகர்கள் ஓட்டுகளை செல்லாதவை என அறிவித்ததும் பின்பு அவர்கள் ஓட்டுகளை செல்லும் ஓட்டுகள் என்றும் அறிவித்தும் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினர் என்று வாக்காளர்கள் குற்றசாட்டு சுமத்தி வந்த வேலையில் தற்போது லே செயலாளர் பதவிக்கு எஸ் டி கே ராஜன் சார்பாக ஜெபசந்திரன் அறிவிக்கபட்ட நிலையில். எஸ் டி கே ராஜன் அணியை எதிர்த்து டி எஸ் எப் கிப்சன் லே செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இது சம்மந்தமாக டி எஸ் எப் சிப்சன் அலுவலகத்தில் அலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் எஸ் டி ஆர் பொன்சீலன் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர் . நாசரேத் திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிட இருக்கும் டி எஸ் எப் கிப்சன் பெயர் ஒரு சில தினங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .