தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் திறந்து வைத்தார் கலெக்டர் செந்தில்ராஜ் !
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறக்கவேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது .தற்போது மீனவர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மான நகல்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருவரிடமும் மீனவர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது கோரிக்கை ஏற்று கொண்ட கலெக்டர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருவரும் இன்று தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை தொடக்கி வைத்தனர் .அப்போது கலெக்டர் பேசும் போது இந்த புறக்காவல் நிலையம் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிக்க உதவும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படால் இருக்க உதவியாய் இருக்கும் என்றும் மட்டுமல்லாது பிடித்துவரும் மீன்களை நல்லவிலை வரும் பொது விற்பதற்காக விரைவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது என்றும் .தூத்துக்குடி மாவட்டத்திலே தூத்துக்குடி மீன் பிடி துறைமுத்தில்தான் அதிக அளவு மீன் பிடிக்கப்படுகிறது இங்கு இருந்து பெங்களூரு ,கேரளா ,சென்னை போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினார் .மற்றும் தொடர் காவல்பணிகளுக்குள் மத்தியில் என் கோரிக்கையை ஏற்று 48 மணி நேரத்திற்குள் புறக்காவல் நிலையத்தை ஏற்பாடு செய்து தந்த கண்காணிப்பாளர் ஜெய்குமாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார் இதில் தூத்துக்குடி டி எஸ் பி கணேஷ் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த ராஜன் ,உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் ,உதவி ஆய்வாளர் முத்துலெட்சுமி ,போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ,போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் , மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மீனவ பொதுமக்கள் கலந்துகொண்டனர் .