ஷ்யாம் நீயூஸ்
17.07.2021
அமைச்சர் கீதாஜீவனிடம் கொரானா நிதி வழங்கிய தூத்துக்குடி சிறுவன்.!
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த சேவை மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார் .அப்போது அங்கு வந்த தூத்துக்குடியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சம்சன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார். நிதி வழங்கிய சிறுவனுக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இருவரும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.