ஷ்யாம் நீயூஸ்
09.07.2021
தூத்துக்குடியில் 20 கோடியில் புது தொழிற்சாலை ! ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு!
தூத்துக்குடியில் தொழிற்சாலை தொடங்க கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு பகுதியில் நூற்பாலைகளை இயக்கி வரும் தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துஉள்ளது. புதிய தொழிற்சாலையை தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் தொடங்கவுள்ளன. இது சம்மந்தமாக தூத்துக்குடி ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜூடம் நிறுவனம் தலைவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைகோவின் மகன் துரை வையாபுரியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
20 கோடி மதிப்பில் தொடங்கபட உள்ள நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிகளவு நிரந்தர வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது .தூத்துக்குடி வளர்ச்சிக்கு இது ஒரு மைல் கல்லாக அமைய உள்ளதால் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தூத்துக்குடியை சார்ந்த தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதாராதாகிருஷ்ணன் அகியோரும் வரேவற்றுள்ளனர்.இந்த தொழிற்சாலை தூத்துக்குடியில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து முக்கிய பங்காற்றியவர் வைகோவின் மகன் வையாபுரி ஆவார்.