ஷ்யாம் நீயூஸ்
04.07.2021
தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை படு ஜோர் சமூக ஆர்வலர் வேதனை!
தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை பல இடங்களில் முக்கிய புள்ளிகள் செய்வதாக குற்றசாற்று எழுந்துள்ளது . பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி சில முக்கிய பிரமுகர்கள் தூத்துக்குடி யில் ருரல் பகுதிகளில் லாரிகளுக்கு மார்கெட் விலையை விட குறைவான விலையில் கலப்பட டீசல் விற்பனை செய்கின்றனர் இதனால் அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றும் கடலோர சாலையில் உள்ள பல்க் உரிமையாளருக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலப்பட டீசல் மூலம் இயக்கபடும் லாரிகள் குறிப்பிட்ட நாளுக்கு பின் எஞ்சின் பழுதடைந்து லாரிகள் உரிமையாளருக்கு பெரும் செலவை ஏற்படுத்தி வருகிறது இதை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சிவராஜ் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படும் கலப்பட டீசல் மூலம் பல கோடி வர்த்தகம் அரசுக்கு தெரியாமல் நடைபெருகிற சம்பவம் தூத்துக்குடி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .திறமையான பொறுப்பான அதிகாரிகள் இருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில கீழ் நிலை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு உண்மையான தகவல்களை மறைத்து தருவதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி கள்ளசந்தையில் டீசல் விற்பனை செய்வதை தடுப்பது நிறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சிவராஜ் கேட்டு கொண்டார்.