SHYAM NEWS
25.05.2019
அ ம மு க உட்கட்சி பூசலால் டெபாசிட் இழந்த தூத்துக்குடி வேட்பாளர்கள் ?
நடந்து முடிந்த தமிழ்நாடு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தி மு க 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றி அபார சாதனை படைத்துஉள்ளது .22 இடை தேர்தலில் 13 தொகுதியில் வெற்றி பெற்றுஉள்ளது .ஆனால் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ ம மு க கழகம் போட்டியிட்ட பல இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது .அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் திரு புவனேஷ்வரன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளர் திரு சுந்தரராஜ் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றவேட்பாளர் திரு ஜோதிமணி போன்றோர் மிக குறைவான வாக்குகளை பெற்று உள்ளனர் குறிப்பாக விளாத்திகுளம் வேட்பாளர் மிக குறைவாக வாக்கு பெற்றுள்ளார் அது தூத்துக்குடி மாவட்ட அ ம மு க கழக தொண்டர்களிடேயே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு ஹென்றி ,வடக்கு பகுதி செயலாளர் திரு அசோக்குமார் மேற்க்கு பகுதி செயலாளர் திரு ஆறுமுகம் ஆகியோர் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை என்றும் மறைமுகமாக தி மு க வுக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் மற்றும் மாணிக்கராஜாவின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் பால்துரையும் எதிராகவே செயல்ப்பட்டார் என்றும் கூறப்படுகிறது .பாராளுமற்ற தேர்தல் மற்றும் ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் இடை தேர்தல் மூன்றுக்குமே கடுமையான உழைப்பை கொடுத்தும் போதிய வாக்கு பெறமுடியாதது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது .மற்றும் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது பொதுச்செயலாளர் டி டி வி தினகரனிடம் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .இனி வரும் நாட்களிலாவது கருத்து வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என
தூத்துக்குடி அ ம மு க தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர் .