SHYAM NEWS
07.05.2019
ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படையை கண்காணிக்க தனிப்படை தேவைப்படுகிறதா ?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தலை முன்னிட்டு பண பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் 90 பறக்கும் படையினர் ஒரு பகுதிக்கு 30 குழு விதம் பிரிக்கப்பட்டு சோதனை பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தட்டப்பாறை விளக்கில் பறக்கும் படையினர் உதவியுடன் பண பட்டுவாடா நடைபெறுகிறது என பத்திருக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது .
இதனை கண்டறிய பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் மட்டுமே பறக்கும் படையினர் விழிப்புடன் சோதனை மேற்கொண்டனர்.பின்னர் குறுக்குசாலை விளக்கு அருகே இருந்து பறக்கும் படை குழுவினர் வண்டி எண் TN 69 AA 2634 என்ற வாகன எண் கொண்ட குழுவினர் குறுக்குச்சாலை ரோட்டில் வண்டியை ஓரமாக நிறுத்தி சிலர் மொபைல் போன் களில் படம் பார்த்து கொண்டு இருந்தனர்.சிலர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தனர்.
அச்சமயத்தில் குறுக்கு சாலை - பாஞ்சாலங்குறிச்சி சாலையின் வழியே நான்கு வெவெறு மாவட்ட எண்களை கொண்ட வாகனங்கள் அணிவகுத்து வந்து பறக்கும் படையினர் இருக்கும் இடத்தில் வந்து யூ டார்ன் எடுத்து சென்றனர்.இதனை இதனை கண்டு கொள்ளாத பறக்கும் படையினர் சிலர் தூங்கி கொண்டு இருந்தனர் சிலர் பார்த்து ரசித்தனர்.
பின்னர் தொடர்ந்து தட்டப்பாரை விளக்கு செல்லும் வழியில் உள்ள செக் போஸ்டில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தனர்.
தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்க பட்ட பறக்கும் படையினரை கண்காணிக்க தனி படை அமைக்க வேண்டும் போல் உள்ளது.?