முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் : காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

SHYAM NEWS
31.05.2019
ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் : காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் வாழ்த்து செய்தி .



புனித ரமலான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹூ தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும்.


ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. ரமலான் மாதம் எத்தகைய சிறப்புள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்
ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் விளங்குகின்றனர்.


ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அருளுகிறார்கள்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும், மனோ ஊசலாட்டங்களையும் நீக்கி விடும் என ஒரு அதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் இருக்கின்றன.


 மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப் பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்பதுதான் நோக்கம், அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திருக்கும் பொழுதுதான் கிடைக்கப்பெறுகின்றன.


அவற்றில் மிகப்பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில்தான் அடங்கியிருக்கிறது.
சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண் டிருக்கிறான். அவனுடைய வழிகளை பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.


அனைத்து உறுப்புகளின் திருப்தி நஃப்ஸின் பசியில் அடங்கி யுள்ளது. ஏனெனில் நஃப்ஸ் பசித்திருந்தால், உறுப்புகள் அனைத்தும் திருப்தியுற்று அமைதி பெறுகின்றன.


 நோன்பினால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகளைபோல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்
இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால், இனிப்பு வகைகள், ஆகா ரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில்தான் உண்டாக முடியும்.


ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சநேரம் பசித்திருப்பதின் மூலம்தான் சாத்தியமாகும்.
வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்தப் பாத்திரத்தையும் நிரப்புவது அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
மேலும் அல்லாஹூ தஆலா புனித ரமலான் மாதத்தில் அர்ஷைச்சுமக்கும் மலக்குகளிடம் உங்களுடைய வணக்கங்களை விட்டுவிட்டு நோன்பாளிகளின் துஆக்க ளுக்கு ஆமின் கூறிக் கொண்டிருங்கள் என்பதாக கூறுகிறார் என ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆக்கள் விசேஷமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பல அதீஸ்களின் மூலம் விளங்குகிறது.
அல்லாஹூ தஆலாவின் வாக்கும், ரஸூ லுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உண்மையான அறிவிப்பும் இருக்கும் பொழுது துஆ ஏற்கப் படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


ஆகவே : இந்த புனிதமான ரமலான் மாதத்தின் மார்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும், கொடுத்த ஜகாத்தினை செய்த இஸ்லாமியர்கள் அணைவருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...