மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் _காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!
ஷ்யாம் நியூஸ்
13.05.2019
வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல்அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அய்யா அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்து வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அய்யா அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் காரணமாக, அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது நல்ல கண்ணு ஐயா அவர்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையும் முன் வைக்காமல் வெளியேறியது அரசின் மீது மரியாதையும் அவரின் பெரும் தன்மையும் காட்டுகிறது .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக உள்ள 94 வயதுடய நல்ல கண்ணு ஐயா அவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் அமைத்து கொடுக்காமல் உடனடியாக வெளியேற்றறியது கண்டனத்திற்குரியது.
பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. என்பது குறிப்பிடதக்கது
எனவே : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், காலி செய்த நல்ல கண்ணு ஐயா அவர்களுக்கும் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.