மதுரையில் நோயாளிகள் ஐந்து பேர் பலி விசாரணை நடத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
SHYAM NEWS
11.05.2019
மதுரையில் நோயாளிகள் ஐந்து பேர் பலி விசாரணை நடத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
தூத்துக்குடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
மதுரை அரசு மருத்துவ மனையில் திவிர சிகிச்சை பெற்று வந்த மல்லிகா. ரவிசந்திரன். பழனியம்மாள் ஆறுமுகம் .செல்லதாய் . ஆகிய ஐந்து பேரும் மின் தடையால் வென்டி லேட்டர் இயங்காமல் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
ஐந்து பேரின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நிரந்த பணியிலிருந்து நீக்க வேண்டும் மெனவும் இது போண்ற சம்பவங்கள் இனி நடை பெறாமல் தடுக்க தமிழகம் முழுவது உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அலட்சயம் காட்டாமல் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் . உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பிடு தொகை வழங்க வேண்டும் மெனவும் இச்சம்பவத்தை முறையான விசாரணை நடத்த வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்