ஷ்யாம் நியூஸ்
27.05.2019
தூத்துக்குடியில் சூதாடிய தொழிலதிபர்கள் உட்பட 35பேர் கைது: ரூ.1¾ லட்சம் பறிமுதல்
தூத்துக்குடியில் உள்ள கிளப்பில் பணம் வைத்து சூதாடியதாக 35பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி டி.ஆர். நாயுடு தெருவில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இது தொடர்பாக போல்பேட்டையைச் சேர்ந்த முத்துமாலை மகன் ராஜேந்திரன், உட்பட 35பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.72லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.