ரெப்கோ நுண்கடன் நிறுவனம் 2018-19ம் ஆண்டு நுண்கடன் வளர்ச்சி 30 சதவீதம், நிகரலாப வளர்ச்சி 57 சதவீதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்
தூத்துக்குடி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுபாட்டிலும், தென்மாநில அரசுகளின் பங்கேற்பிலும், 1969ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெப்கோ வங்கியால் 2007ம் ஆண்டு துவக்கப்பட்ட ரெப்கோ நுண்கடன் நிறுவனம் மகளிரின் வாழ்வாதாரத்தை நுண்கடன் மூலம் உயர்த்த முடியும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் மகளிர் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாடு நடடிவக்கைகள் மற்றும் தொழில் முனைவு பயிற்சிகள் அளித்து வருமானம் ஈட்ட வகை செய்துள்ளது.
நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் நுண்கடன் வழங்குவதில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து கடன் வழங்குதல் தொகை ரூ927 கோடியடைந்து, நிகர லாபம் 57 சதவீத வளர்ச்சி கண்டு, நிகர மதிப்பு ரூ166 கோடியை கடந்து செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 33 மாவட்டம் யூனியன் பிரதேசம் புதுச்சேரி உள்பட 90 கிளைகளுடன் செயல்படுகிறது. மொத்த வராக்கடன் 0.87சதவிதம் மற்றும் நிகர வராக்கடன் பூஜியம் கொண்டுள்ளது. சிறந்த அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் கொண்டு இடர் மேலாண்மை செயல்முறை அமைக்கப்பெற்று நாட்டின் முதன்மையான நுண்கடன் நிறுவனமாக செயல்படுகிறது. சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாதோரின் வாரிசுகள் பயிலும் பள்ளிகளுக்கு கழிப்பறைகள் மற்றும் வகுப்பறை கட்டுதல், உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குதல் இலவச மருத்துவமுகாம், சுகாதாரமான குடிநீர் ஏற்படுத்தி தருதல் போன்ற சமுதாய பணிகளை செய்கிறது.
வரும் 2019-20ம் நிதியாண்டில் ரூ1300 கோடி நுண்கடன் நிலுவை தொகையையும், 110கிளைகளையும் இலக்காக கொண்டு கேரளா, கர்நாடகா, ஓரிசா மாநிலங்களுக்கு நுண்கடன் திட்டத்தினை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்று மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.