பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு -தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பாலியல் கயவர்களை தூக்கிலிட வேண்டும்!
ஷ்யாம் நியூஸ்
14.03.2019
பொள்ளாச்சி பாலியல் கயவர்களை தூக்கிலிட வேண்டும்!
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு -தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !
பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் பொள்ளாச்சி ஜெயராமன் பதவியை பறிக்க வேண்டும் வசதியுள்ள பிள்ளைகளுக்கு அரசு துணைபோககூடாது .பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தனித்தனியே புகார் பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத எஸ் .பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வரும் தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட போவதாகவும் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோஷம் போட்டனர். இதில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞ்சர் அத்தியாகுமார் ,பேராசியரும் சமூக ஆர்வலருமான திருமதி பாத்திமாபாபு ,வழக்கறிஞ்சர்கள் ராஜா ,ரீகன் ,விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் இக்பால், ம. தி .மு.க. நக்கீரன் ,மகாராஜன் ,ரமேஷ் ,சி பி ஐ வழக்கறிஞ்சர் ராமசந்திரன் ,ராபின் சித்தரஞ்சன் ,வ .உ.சி. பேரவை லட்சுமணன் ,அ .ம .மு .க . வழக்கறிஞ்சர் தேவப்பிரியன் காங்கிரஸ் அருள் ,மற்றும் பல பெண் வழக்கறிஞ்சர்கள் ,குழந்தைகள் உரிமை ஆர்வலர் வழக்கறிஞ்சர் சுப மாடசாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .