ஷயாம்நீயுஸ்
29.0302019
பண்ணை வீடும் !பொய் வழக்கும்! அனிதா?
தேர்தல் விதிமுறைகளை மீறிய தமிழிசை செளந்தரராஜன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு மனு அளித்தனர்.
பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இருபது நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை வைத்து பொய்யான புகார் அளித்து திமுக வேட்பாளர் கனிமொழி மீதும் என் மீதும் பொய்வழக்கு பதிந்துள்ளனர். அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை தேர்தல் விதிமுறைகளை மீறி மதத்தின் பெயரை கூறி ஓட்டு கேட்டுள்ளார். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் ?. பொய்புகார் கொடுத்து எங்கள் தேர்தல் பணிகளை முடக்க பார்க்கின்றனர். முதல்வர் எடப்பாடி மற்றும் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் எங்கள் மீது பொய் வழக்கு பாேடப்பட்டுள்ளது.
பொய்புகார் மூலம் எங்களை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்து பாேவார்கள். எங்கள் மீதான பொய்வழக்கை உடனே ரத்து செய்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முத்துராமலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள்கட்சி தலைமை முடிவு படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.