ஷயாம் நியூஸ்
14.03.2019
மாணவிகளை புரட்சி செய்ய அழைக்கும் தூத்துக்குடி ஐ ஏ எஸ் அதிகாரிகள் !
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்திப் நந்தூரி (இ ஆ ப ) தொடங்கி விட்ட நிலையில் தூத்துக்குடி ஏ பி சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் (14.03.2019) மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .கல்லூரி முனைவர் .திருமதி .சத்யபாமா அவர்களோடு என் சி சி மாணவியரும் இணைந்து ஆட்சியர் அவர்களுக்கு முறையான வரவேற்பினை வழங்கினர் .ஆட்சியரோடு மாவட்ட ஆணையர் திரு வி பி ஜெயசீலன் ஐ ஏ எஸ் உதவி ஆட்சியர் திருமதி அணு ஐ ஏ எஸ் ஆகியோர்கலந்துகொண்டனர் .தொடர்ந்து மாணவியரின் கைவண்ணத்தில் உருவான தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களை உள்ளடங்கிய ரங்கோலி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியர் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .
கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் தேர்தல் விழிப்புணவு வாசகங்களடங்கிய பதாகைகளோடு வளம் வந்தனர் தெருக்கூத்து மற்றும் விழிப்புணவு நாடகமும் நடைபெற்றது .விழாவில் ஆட்சியர்கள் பேசுகையில் தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவில் நம் அனைவரும் கலந்து கொண்டு தவறாமல் வாக்களித்து ஒரு விரல் புரட்சி செய்யவேண்டும் என்றும் நம் குடும்பத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வாக்குஅளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்து கூறி வரும் ஏப்ரல் 18 2019 அன்று வாக்களித்ததை உறுதி செய்யவேண்டும் எனவும் கலந்து கொண்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் அனைவரும் கேட்டுக்கொண்டனர் .இந்நிகழ்விற்கு கல்லுரியின் முதல்வர் அனைவரையும் வரவேற்றார் .தமிழ்த்துறை மாணவி செல்வி .பொன்கணகாவின் உரையை தொடர்ந்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது .புது வாக்காளர்களுக்கு மாதிரி வாக்கு எந்திரம் வைத்து செயல்முறை விளக்கங்களையும் ஆட்சியர் செய்து காட்டிணார் கல்லூரி மாணவிகள் மாதிரி வாக்குகள் அளித்தோடு மட்டும் அல்லாமல் சந்தேகங்களை கேட்டும்தெரிந்துகொண்டனர்.