ஷயாம் நியூஸ்
22.03.2019
பாராளுமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு கொடுத்த ஆதரவு - ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வாபஸ் : காயல் அப்பாஸ் அறிவிப்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்த போது 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அன்று முதல் இன்று வரையிலும் அ தி மு கவின் தோழான்மையில் இருந்து வருகிறோம். நடைபெறுகின்ற பாராளு மன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைதேர்தலில் அ தி மு க கூட்டணியில் ஓரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்பது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது . அ தி மு க மற்றும் தி மு கவில் கூட ஓரு முஸ்லிம் வேட்பாளராக அறிவிக்கவில்லை ஆனால் டி டி வி தினகரன் அவர்கள் எஸ் டி பி ஐ கட்சிக்கு ஓரு சிட் வழங்கி உள்ளார் மற்றும் மக்கள் நீதி மைய்யம் கட்சியில் இஸ்லாமியர்களுக்கு இரண்டு சிட் வழங்கியதற்க்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். எனவே : வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு கொடுக்க பட்ட ஆதரவை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் திரும்ப பெற்று கொள்வதுடன் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதை அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.